Aayiramayiram Nanmaigal - ஆயிரமாயிரம் நன்மைகள்

 


Credits:

Song : Aayiramayiram Nanmaigal
Lyrics, Tune & Sung : Johnsam Joyson
Album : Um Azhagana Kangal (Karunaiyin Pravaagam 5)
Music : Stephen J Renswick

Lyrics:

ஆயிரமாயிரம் நன்மைகள்
அனுதினம் என்னை சூழ்ந்திட
கிருபையும் இரக்கமும் அன்பும் கொண்டீரே -2
நல்ல எபிநேசராய்  என்னை
நடத்தி வந்தீரே
நன்றி சொல்ல வார்த்தை இல்லையே - 2

காலை மாலை எல்லா வேளையிலும் என்னை 
நடத்தும் உம் கரங்கள் நான் கண்டேன்
தேவை பெருகும் போது சிக்கி தவித்திடாது 
உதவும் உம் கரங்கள் நான் கண்டேன்

எல்லா நெருக்கத்திலும் என்னை
விழாமல் காக்கும் அன்பின் நல்ல கர்த்தரே - 2

மரணப்  பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளை
மீட்கும்  உம் கரங்கள் நான் கண்டேன்
வாடி நின்ற வேளை மடிந்திடாது என்னை
தாங்கும் உம் கரங்கள் நான் கண்டேன்

எந்தன் மாராவின் வாழ்வை மதுரமாய் மாற்றும்
அன்பின் நல்ல கர்த்தரே - 2
----------

Video link:

To watch this song on you tube. Click here.