Ejamaananae - எஜமானனே

 


Credits:

Song : Ejamaananae - எஜமானனே
Sung by : Ps. John Jebaraj
Album : Levi 3

Lyrics:

எஜமானனே (2)
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் – 2

 அழியும் என் கைகளை கொண்டு
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்
அழியும் என் உதடுகள் கொண்டு
அழியா உம் வார்த்தையை சொல்ல
எத்தனாய் வாழ்ந்த என்னை பிரிந்தெடுத்தீர்  (தெரிந்தெடுத்தீர்)
 
ஆராதிப்பேன் அதை எண்ணியே
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே - 2
ஆராதிப்பேன் – 8
 
என்னில் என்ன நன்மை கண்டீர்
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் - 2

உம் சித்தத்தை நான் செய்வதே
அனுதினமும் என் போஜனம்  - 2 

Video Link:

To watch this song on Youtube. Click here