Nandri sollamal - நன்றி சொல்லாமல்


Details :

Song : Nandri sollamal
Sung by : Sudha sekar

Lyrics:

நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது
பல நன்மை செய்த இயேசுவுக்கே
நன்றி நன்றி நன்றி என்று சொல்லி நான் துதிப்பேன்
நாள்தோறும் போற்றுவேன் - 2

எத்தனையோ நன்மைகள் என் வாழ்வில் செய்தாரே
ஏராளமாய் நன்றி சொல்வேன்
அத்தனையும் நினைத்து நினைத்து நான் துதிப்பேன்
ஆண்டவரைப் போற்றுவேன் - 2

மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த போதெல்லாம் பாதுகாத்தீரைய்யா
மீண்டும் ஜீவனைக் கொடுத்து நீர்
என்னை வாழ வைத்தீரைய்யா - 2

தேவன் அருளிய சொல்லி முடியாத
ஈவுகளுக்காய் ஸ்தோத்திரம்
அளவற்ற அவரின் கிருபைகளுக்காய்
ஆயுள் முழுவதும் ஸ்தோத்திரம் - 2
---------

Video link:

To watch this song on you tube. Click here