Kanmalaiyum Kotaiyum - கன்மலையும் கோட்டையும்

Kanmalaiyum Kotaiyum

Credits :

Song : Kanmalaiyum Kotaiyum
Lyrics, Tune & Sung by : Pr. Ebenezer
Music : Lijo Felix

Lyrics :

1. கன்மலையும் கோட்டையும்
இரட்சகரும் தேவனும்
நான் நம்புகின்ற துருகம் நீரே-2
எந்தன் அடைக்கலம் நீரே
எந்தன் தஞ்சம் நீரே 
நான் நம்புகின்ற தெய்வம் நீரே-2

ஆராதிப்பேன் அன்பு கூறுவேன்
உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன்

2. கேடகமும் மகிமையும்
தேவனும் என் ஜீவனும்
என் இரட்சண்ய கொம்பும் நீரே-2
எந்தன் மறைவிடம் நீரே
எந்தன் புகலிடம் நீரே
என்னை பாதுகாக்கும் தந்தை நீரே-2


3. வானங்களில் பெரியவர்
பூமியிலும் பெரியவர்
என் வாழ்க்கையிலும் பெரியவர் நீரே-2
என்னை அறிந்தவர் நீரே
தெரிந்து கொண்டவர் நீரே
என்னை கைவிடாத கர்த்தர் நீரே-2
--------
Lyrics courtesy: YouTube comments. Thanks to Daniel Kishore.

Video link :

To watch this song on YouTube. Click here