Kedagam neerthane - கேடகம் நீர் தானே

Kedagam neerthane

Credits :

Song : Kedagam neerthane
Lyrics , Tune & Sung by : Ben Samuel
Music : John Rohith
Album : En Nesarae 3

Lyrics:

கேடகம் நீர் தானே
பெலனும் நீர் தானே - 2
துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்
வாழவைப்பவரே - 2

கேடகமே அடைக்கலமே
நான் நம்பும் கன்மலையே - 2
நான் நம்பும் கன்மலையே -கேடகம்

1.கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்தேவனே - 2
ஏற்ற காலத்தில்  கண்ணீருக்கு
பதில் தந்து காப்பவரே - 2 - கேடகமே

2.கூப்பிடும் போது மறு உத்தரவு
கொடுத்திடும் நல் தேவனே - 2
ஆத்துமாவிலே பெலன் தந்து
என்னைத் தைரியப்படுத்தினீரே - 2 - கேடகமே

3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே - 2
எனக்காக யாவையும்
செய்து முடிப்பவரே - 2 - கேடகமே
---------
Lyric courtesy: YouTube comments. Thanks to Daniel kishore.

Video link:

To watch  this song on YouTube. Click here