Neerae vazhi - நீரே வழி நீரே சத்தியம்

Neerae vazhi

Credits :

Song : Neerae vazhi
Lyrics & Sung by: Ravi Bharath
Album : Aayathama-2

Lyrics :

நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்- வேறே
ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்
விண்ணிலும் மண்ணிலும் மெய்
நாமம் உந்தன் நாமம் ஐயா
உமக்கு நிகர் என்றும் நீர் தானைய்யா

கல்லுமல்ல மண்ணுமல்ல கல்லால் ஓர்
சிற்பமல்ல ஜீவனுள்ள தேவன்
என்றால் நீர் தானைய்யா-ரூபமும்
உமக்கில்லை சொருபமும் உமக்கில்லை
ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே

உண்டானது எல்லாமே உம்மாலே
உண்டானது உம் நாம மகிமைக்கே
உண்டாக்கினீர்- படைப்பு தெய்வமல்ல
பார்ப்பதெல்லாம் தெய்வமல்ல
கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா

எல்லாம் வல்ல தெய்வம் நீரே
எல்லையில்லாதவரே
உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே
வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி
----------

Lyrics Courtesy : YouTube comments. Thanks to Aruna JV

Video link :

To watch this song on YouTube. Click here