Pathai theriya - பாதை தெரியா ஆடு போல

Pathai Theriya

Credits :

Song : Pathai theriya
Lyrics & Tune : Pr. G. Jayaraj
Sung by :  Sis.Rachel
Music :  Lijo Felix

Lyrics:

பாதை தெரியா ஆடு போல
பேதையாக நானிருந்தேன்
நல்ல மேய்ப்பன் தேடி வந்தீர்
பிள்ளையாக மாற்றிவிட்டீர் - 2
நன்மைகள் பலவும் செய்பவரே
நன்றியோடு நான் பாடுவேன்
துன்பங்கள் என்னை சூழ்கையிலே
துணையாய் வந்து காப்பவரே - 2

1. வாழ்க்கை என்னும் படகிலே
நான் வழி தெரியாமல் தவிக்கையிலே - 2
உம் அன்பால் என்னையும் அணைத்தீர்
என் படகோட்டியாய் நீர் வந்தீர் - 2
உந்தன் அன்பு மாறாததே
உந்தன் அன்பு குறையாததே 
உந்தன் கிருபை தினம்தோறுமே 
எந்தன் வாழ்வை நடத்திடுதே - 2 - பாதை

2.வேதனையான நேரத்திலே
என் வேந்தன் உம்மை நான் தேடினேன்
வேதனையில்லா நேரமெல்லாம் என் வேந்தன் 
உம்மை நான் தொலைத்தேன் 
இந்த பாவியையா நீர் தேடினீர்
உம் பாசத்தாலே என்னை மூடினீர்  - 2
என்ன சொல்லி நான் பாடுவேன் 
என்னை மீட்ட மெய் தெய்வமே 
ஜீவன்னுள்ள காலமெல்லாம் 
நன்றி பாடல் நான் பாடுவேன் - 2 -பாதை 
---------


Lyrics courtesy: YouTube comments. Thanks to Jesus Version 

Video link:

To watch this song on YouTube. Click here