Pavathin Baram - பாவத்தின் பாரமதை

Pavathin Baram



Credits :

Song : Pavathin Baram
Lyrics & Tune : Dr.K.Shyam Kumar
Sung by : Dolce Richard
Music : Vinny allegro

Lyrics:

பாவத்தின் பாரமதை சுமந்த என் மீட்பரே 
பாவி நான் என்ன செய்ய 
உந்தன் தயை நாடினேன் - 2

பாடுகள் எத்தனை அத்தனையும் - 2
பாதகன் எனக்காய் ஏற்றுக்கொண்டீரோ - 2 - பாவத்தின்

1. பூப்போன்ற உந்தனின் சரீரமதிலே
பூத்திட்ட  ஆணிகளால் தளர்ந்திட்டதல்லவோ - 2
யூதாவின் ராஜா முட்க்ரீடம் உமக்கோ - 2
பரிசுத்த ரத்த வேர்வை எனக்காக சிந்தினீரோ - 2 - பாவத்தின்

2. உம்மோடு அன்று பொல்லாத கள்வனை 
பரதீசியில் இன்று இருப்பாய் என்றுரைத்தீர் - 2
அப்பெரும் பாக்கியம் எந்தனுக்கிட்டதோ - 2
பரிதவித்தே உந்தன் க்ருபை என்றும் வேண்டியே - 2 - பாவத்தின்

3. சிலுவை மரத்தில் சாவை வென்றீரே 
சிந்தின ரத்த துளிகள் பாவமெல்லாம் நீக்கிற்றே - 2
சிறியவன் என்னையும் உந்தனின் பனிக்காய் - 2
சிரமதை தாழ்த்தி உமக்கென்றும் அற்பணிப்பேன் - 2 - பாவத்தின்
----------

Video link :

To watch this song on YouTube. Click here.