Pudhu Vaazhvu - புது வாழ்வு தந்தவரே

Pudhu Vaazhvu

Credits :

Song : Pudhu vaazhu thanthavare
Lyrics & sung by : Ps. John Jebaraj
Album : Levi 3

Lyrics :

புது வாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே - 2

நன்றி உமக்கு நன்றி
முழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மன நிறைவுடன் சொல்கின்றோம் - 2

பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்தீரே – (உம்) - 2 
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – (என்) - 2
– நன்றி…

முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல் - 2
புதியவைகள் தோன்றச் செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கி விட்டீர் - 2
 – நன்றி…

கண்ணீருடன் விதைத்ததெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் - 2
ஏந்தி நின்ற என் கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய் மாற்றி விட்டீர் - 2
 – நன்றி…

Video link :

To watch  this song on YouTube. Click here