Neenga vaanga - நீங்க வாங்க சீக்கிரம் வாங்க

Neenga vaanga

Credits :

Song : Neenga vaanga
Lyrics , Tune & Sung by : Ravi Bharath
Music : Sam Prakash
Album : Ayyathammaa Vol. 7 , Song 6

Lyrics :

நீங்க வாங்க சீக்கிரம் வாங்க - உங்க
இராஜியத்த எதிர்பார்கிறோம் நாங்க - 2
                             
1. அநியாயம் அதிகமாச்சே
நியாயம் நீதீ தொலைஞ்சு  போச்சே 
வியாதி வறுமை பெருகி போச்சே
அன்பும் காணாம போச்சே - 2
நீங்க வந்தாதான் ஒரு முடிவு வரும்
நீங்க வந்தாதான்  நல்ல  விடிவு வரும் 
                                              - வாங்க 
                        
2. கடவுள் பயம் கொறஞ்சு போச்சே
மனசாட்சியும்  மறைஞ்சு போச்சே
இதயம் முழுதும் இருண்டு போச்சே
இல்லம் இல்லாம போச்சே - 2
நீங்க வந்தாதான் மறுவாழ்வு வரும் 
நீங்க வந்தாதான் திருவாழ்வு வரும் - 2
                                       -  வாங்க

*வறுமை ஒழியணும் வாழ்வு நிறைவாய் வேண்டும்
வியாதி ஒழியணும் 
வையம் நலம் பெற வேண்டும்
சண்டை மறையணும் 
நிம்மதி மலர்ந்திட வேண்டும்
தீமை ஒழியணும் 
நன்மை நதியாய் ஓடணும்
பாவம் ஒழியணும் 
நீதீ நிலைந்திட வேண்டும்
மரணம் மடியணும் 
ஜீவன் நிரந்தரம் வேண்டும்
                                       - நீங்க
---------
Lyrics Courtesy : YouTube comments. Thanks to Andersonpet NCAG.

Video link :

To watch this song on Youtube. Click here.