Ennai Uruvaakkineer - என்னை உருவாக்கினீர்


Credits :

Song : Ennai uruvaakkineer - Vaarthaiyaanavarae
Lyrics , Tune & Sung by : Johnsam Joyson
Music by : Stephen Jebakumar

Lyrics :

என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால்
என்னை உயிர்ப்பித்ததும் உந்தன் வார்த்தையால் -2
எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால்
எனை தாங்கினீர் சுமந்தீர் உம் வார்த்தையால் -2

வார்த்தையானவரே ஆதியில் இருந்தவரே
எனக்காய் வந்தவரே எல்லாம் தருபவரே-2
வார்த்தையானவரே....

1. நீர் செய்வதை யாரால் தடுத்திட கூடும்?
நீர் சொன்னதை யாரால் எதிர்த்திட கூடும்? -2
நீர் செய்வதை தடுப்பவன் இல்லை
சொன்னதை எதிர்ப்பவன் இல்லை-2
வல்லமை நிறைந்த வார்த்தையானவரே
இயேசுவே...  - என்னை உருவாக்கினீர் 

2. நீர் குறித்ததை யாரால் அழித்திட கூடும்?
நீர் உரைத்ததை யாரால் மறுத்திட கூடும்? -2
நீர் குறித்ததை அழிப்பவன் இல்லை
உரைத்ததை மறுப்பவன் இல்லை-2
வல்லமை நிறைந்த வார்த்தையானவரே
இயேசுவே...  - என்னை உருவாக்கினீர்
----------

Lyric courtesy : YouTube comments. Thanks to Daniel Kishore

Video link :

To watch this song on YouTube. Click here