Parisuthathil neer (Valakkaram) - பரிசுத்தத்தில் நீர்


Credits :

Song : Parisuthathil neer magathuvam ullavarae (valakkaram)
Lyrics, Tune & Sung by : Asborn Sam
Music by : John Rohith

Lyrics :

பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே 
துதிகளிலே நீர் பயப்படத்தக்கவரே - 2
யுத்தத்திலே வெற்றியை தருபவரே
அற்புதங்கள் எப்போதும் செய்பவரே - 2

உம்  வலக்கரம் எதிரியை அழிக்குமே 
உம் மகத்துவம் நிர்மூலமாக்குமே - 2

1. நாசியின் சுவாசத்தினாலே 
ஜலம் குவிந்து நின்றது 
வார்த்தையின் வல்லமையாலே 
கடல் இரண்டாய் பிளந்தது - 2

2. உருவின பட்டையத்தோடு 
எனக்கு முன் நீர் செல்வதால் 
பகைஞர் தங்களுக்குள்ளே
வெட்டுண்டு மடிந்து விழுந்தாரே - 2

Video link:

To watch this song on YouTube. Click here