Aarivar aararo - ஆர் இவர் ஆராரோ

 


Credits :

Song : Aarivar aararo
Lyrics : Traditional Tamil song

Lyrics:

ஆர் இவர் ஆராரோ இந்த அவனியோர் மாதிடமே 
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த 
இவ்வற்புத பாலகனார்

பாருருவாகுமுன்னே இருந்த 
பரப் பொருள் தானிவரோ 
சீருடன் புவி வான் அவை பொருள் 
யாவையும் சிருட்டித்த மாவலரோ 

மேசியா இவர்தானோ நம்மை 
மேய்த்திடும் நரர்கோனோ  
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் 
அதி அன்புள்ள மனசானோ 

தித்திக்கும் தீங்கனியோ நமது 
தேவனின் கண்மணியோ 
மெத்தவே உலகிருள் நீக்கிடும் 
அதிசயமேவிய விண்ணொளியோ 

பட்டத்து துரைமகனோ நம்மை பண்புடன் 
ஆள்பவனோ 
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்பு 
காட்டிடுந்தாயகனோ

ஜீவனின் அப்பமோதான் தாகம் 
தீர்த்திடும் பானமோதான் 
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் 
அடைக்கலமானவர் இவர்தானோ
----------

Video link:

To watch this song on YouTube. Click here