Vakkuthathangal aayiram - வாக்குத்தத்தங்கள் ஆயிரம்


Credits :

Song : Vakkuthathangal aayiram
Lyrics & Tune : Sis. Priya Ragu
Sung : Eva. Enoch Gnanaraj
Album : Ennai Kandeer Vol - 1

Lyrics :

வாக்குத்தத்தங்கள் ஆயிரம் 
வழங்கிய தேவனே ஸ்தோத்திரம் 
வாக்குரைத்தவை ஒவ்வொன்றாய் 
நடத்தி வருபவரே ஸ்தோத்திரம் - 2

உம் வார்த்தையை நம்பியே 
வந்துள்ளேன்
வாழ்க்கையை உம்மிடம் 
தந்துள்ளேன் - 2 - வாக்குத்தத்தங்கள்

தாய்தன் பிள்ளையை மறந்தாலும் 
நான் உன்னை என்றும் மறப்பதில்லை 
உள்ளங்கையில் வரைந்துள்ளேன் 
எவரும் உன்னை பறிப்பதில்லை - 2 - உம் வார்த்தையை

அக்கினி மதிலாய் நின்றிடுவேன் 
கண்ணின்மணிபோல் காத்திடுவேன் 
அனுகுலமான துணையாவேன் 
அடைக்கலம் தந்து நடத்திடுவேன் -2 - உம் வார்த்தையை

வாதை உன்னை அணுகாது 
தீமை உன்னை நெருங்காது 
ஒருவனும் உன்னை எதிர்ப்பதில்லை 
ஒருநன்மையும் உனக்கு குறைவதில்லை - 2 

சிறுமைப்பட்டு போவதில்லை 
வெட்கப்பட்டு போவதில்லை - 2 - வாக்குத்தத்தங்கள்
-----------

Video link:

To watch this song on YouTube. Click here