Ummai allamal enaku - உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?


Credits :

Song : Ummai allamal enaku
Lyrics, Tune and Sung by : Father S. J. Berchmans
Album : Jebathotta Jeyageethangal Vol - 29

Lyrics :

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?

ஆசையெல்லாம் நீர்தானைய்யா
தேவையெல்லாம் நீர்தானைய்யா - 2 
இரட்சகரே இயேசுநாதா
தேவையெல்லாம் நீர்தானே - 2

இதயக்கன்மலை நீர்தானய்யா
உரிய பங்கும் நீர்தானய்யா - 2
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்துத் தாங்குகிறீர் - 2

உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்த்துடிப்பு - 2
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக் கொள்றீர் - 2

உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன் - 2
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் - 2

Video link :

To watch this song on YouTube. Click here