Unga kirubai pothum - உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு


Credits :

Song : Unga kirubai pothum
Lyrics, tune & sung by : Ps. Premkumar Paulsingh
Music : Alwyn

Lyrics:

உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு 
 உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
 என்னை காண்பவரே
 என்னை காப்பவரே-2
 நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2

1.போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரே
  பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே-2
  பகலினிலும் இரவினிலும்-2
  தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்-2   -   உங்க கிருபை

2. காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர்
   கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர்-2
   கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்-2
   கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்-2    -  உங்க கிருபை
---------- 

Video link :

To watch this song on YouTube. Click here