Ummunnae enakku - உம்முன்னே எனக்கு


Credits :

Song : Ummunnae enakku
Lyrics, Tune & Sung by : Father S. J. Berchmans
Album : Jebathotta Jeyageethangal Vol - 26

Lyrics :

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு
நிறைவான மகிழ்ச்சி நீரே
நித்திய பேரின்பமே - 2

என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்- 2
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசைவேறயில்லை - 2
என்னைக் காக்கும் இறைவன் நீரே 
அரசாளும் தலைவர் நீரே 
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை - 2

எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே - 2
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே - 2
எனக்குரிய பங்கு நீரே பரம்பரை சொத்து நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை - 2

எப்போதும் என் கண் முன்னே
உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன் - 2
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர் - 2
எப்போதும் என் முன்னே உம்மைத்
தான் நிறுத்தியுள்ளேன்
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை - 2

என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது - 2
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே உம்மைப் பாடுவேன் - 2
என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை - 2
------------

Video link :

To watch this song on YouTube. Click here